Saturday 29 March 2014

1983-88
----------
Hostel திருவிளையாடல்
----------------------------------
ஸ்டவ் திரி சிறிது மொத்தமாக இருக்கும், அதில் தீ பொறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து தீயை அணைத்தால், கங்கு அணையாமல் இருக்கும், அதன் சாம்பல் விழுவதற்கு நிரம்ப நேரமாகும்.
--------------------------------------------------------------------------------------
வார்டன் ஒதுக்கிய அறை எண் 63-ல் நுழைந்தால் இன்றைய செசென்ஸ் கோர்ட் நீதிபதி  முருகேசன், அண்ணாமலை யுனிவெர்சிட்டி பௌதீக இயல் துறை DR. சலீம், அன்றைய என் அறை நண்பர்கள்.

அறை 63-க்கு இடதுபுறம் இரண்டாவது, மூன்றாவது தளத்துக்கான படிகள், வரிசையாக திறந்தவெளி ரெஸ்ட்ரூம்கள், பிறகு அறை எண் 1-ன் வலதுபுற சுவர்.மாடிப் படிகளின் கீழ் EB மீட்டர் மற்றும் வரிசையாக மூன்று தளங்களின் மெயின் சுவிட்சுகள்.

நல்ல வேளையாக முதல் தளத்திலேயே அறை கிடைத்ததில் மகிழ்ச்சி! அதை தெரிவிக்கும் போதே, இருவரும் ரொம்ப சந்தோஷப் படாதே! இரவு வேளையில் நம்முடைய சீனியர்கள் மேல் தளங்களுக்குப் போகும் முன் நம் அறைக்  கதவைத் தட்டி திருடன் போலீஸ் விளையாடுவார்கள். ரெஸ்ட்ரூம்க்கு வரும் மற்ற நண்பர்கள் பேஸ்ட், சோப்பு ஓசிக் கேட்பார்கள். எல்லாவற்றையும் விட கதவைத் தட்டி, தட்டி ரொம்ப ரகளை பண்ணுவார்கள் என புலம்ப ஆரம்பித்தனர்.

--------------------------------------------------------------------------------------
லுங்கி உடுத்தும் சூழல் கிடைத்தும் லோக்கல் கார்டியன் பாலு மாமாவின் கண்டிப்பான உத்தரவின் பேரில் வேஷ்டி, வெள்ளை கை வைத்த பனியன் தான் போட வேண்டி இருந்தது.
--------------------------------------------------------------------------------------
இரவு முழுவதும் புதிய சூழல் மற்றும் மேல் தளத்திற்கு இரண்டாம் காட்சி பார்த்துவிட்டுப் போகும் நண்பர்கள் அந்த நேரத்திலும் மகிழ்ச்சியுடன் கதவைத் தட்டி விளையாடிச் சென்றதன் காரணமாக சிறிதும் தூங்க முடியவில்லை. பத்து, பதினைந்து நாள் இப்படியே கழிந்தது. முருகேசன், சலீம் புலம்புவதின் அர்த்தம் முழுவதுமாக புரிந்தது.

அன்று ஞாயிறு காலை எங்களுடைய வெஜ்.மெஸ்ஸில்  பிரட்&குருமாதான் காலை உணவு.
முருகேஷ்! நாம் அப்படியே வெளியே சென்று சாப்பிட்டு விட்டு எனக்கு கொஞ்சம் ஸ்டவ் திரி வாங்க வேண்டும் என்று சொல்ல
என்ன மச்சி? சாப்பிடப் போகலாம், ஆனால் எதற்குத் திரி வாங்க வேண்டும்?!.
நீ முதல்ல கிளம்பு, சாப்பிட்டுக் கொண்டே உனக்கு சொல்கிறேன்.
அப்படியே நடந்து போய் திரி வாங்கிய போது, முருகேஷ் இதுதான் என் ஐடியா, நீ சலீமை மட்டும் கரெக்ட் செய்துவிடு.
--------------------------------------------------------------------------------------
பயந்தால் நிம்மதி போய்விடும். பயப்படுபவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள் என்று வெளியே சொல்வதில்லை.
--------------------------------------------------------------------------------------
சலீம் இவன் சொல்வது  நல்லத் திட்டமாகத் தெரிகிறது, என்ன சொல்கிறாய் என முருகேஷ் கேட்க,அதற்கு சலீம், டேய்!  வேணாண்டா! மாட்டிகொண்டால் பின்னிவிடுவார்கள்.
நான், சலீம் இங்க பாரு, நீ நிம்மதியாக தூங்க வேண்டுமா? இல்லையா? நம்மை யாராவது பார்த்துவிட்டால் கூட ஒன்றுமே நடக்காதது மாதிரி போய்விடுவார்கள்.

சலீம் திட்டத்துக்கு ஒத்துக்கொண்டு விட, சலீம் எங்களது அறைக்குள் தாழ் போடாமல் கதவின் பின்னால் ஒரு ஸ்டூல் வைத்து விட்டு நாங்கள் குரல் கொடுத்தவுடன், கதவைத் திறந்து பிறகு தாழிட வேண்டும்.

முருகேஷ் நான் சைகை செய்தவுடன் எல்லா மெயின்  சுவிட்ச்களையும் அணைத்துவிட வேண்டும். திரும்பவும் போட்டுவிட்டு அறைக்குள் என்னோடு நுழைந்து விட வேண்டும்.

சீனியர்கள் இரண்டாம் காட்சி முடிந்து, பேருந்து கிடைக்காமல் நடந்தே வந்து, அயற்சியாக மாடிப் படி ஏற ஆரம்பித்தனர். நான் என்னுடைய கழுத்தில் கம்பளி ஒன்றை சுற்றிக் கொண்டு, வெள்ளை வேட்டி, பனியனுடன், திரியை கங்குடன் வைத்துக் கொண்டு மூச்சைப் பிடித்துகொண்டு ரெஸ்ட்ரூம் தூணிற்குப் பின்னால் நிற்கிறேன்.

சிறிது சிறிதாக நண்பர்கள் மெல்ல மெல்ல மேலே ஏறிவர, அவர்கள் எப்போதும்போல் கதவைத் தட்ட,முருகேஷ் விளக்கை அணைக்க, நான் திரியை ரஜினி சிகரெட் முழுங்குவது போல் வாய்க்குள் கொண்டுபோய், பற்களால் திரியை மெட்டிக் கொண்டு, வாயைத் திறக்காமல் ஒரு ஓலமிட, என்னுடைய பற்களின் இடைவெளியில் தீயின் ஜ்வாலை சிகப்பாக ஒளிர, அவர்கள் என்னைக் கொள்ளிவாய்ப் பிசாசு என்று நினைத்துக் கொண்டு ஓட, நான் விரட்ட, அவர்கள் உயிர்மேல் உள்ள ஆசையில் திரும்பிப் பார்க்காமல் ஓடினர்.

நான் கொஞ்சம் விரட்டிவிட்டு முருகேஷ்-ஐ கூப்பிட, அவன் விளக்குகளை திரும்பப் போட்டுவிட்டு, இருவரும் எங்கள் அறைக்குள் நுழைய, சலீம் தாளிட சிரித்துக்கொண்டும், பாராட்டிகொண்டும், அன்று முழுவதும் நாங்கள் உறங்கவே இல்லை.

பயந்து ஓடியதில் அவர்கள் மின் விளக்குகள் அணைந்து திரும்ப எரிந்ததை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் முதல் தளத்தில் கொள்ளிவாய் பிசாசு இருப்பதாகவே நம்பினர்.
-----------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கையில் தானே வாழ்க்கையே இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------

அந்த 5 வருடமும் முதல் தளம் எங்கள் மூவரின் கண்ட்ரோல்-லில் தான் இருந்தது.




Saturday 22 March 2014

எனக்கு சாதரணமாக டர்பன் கட்டிய சீக்கியர் என்றால் மிகப் பிடிக்கும், தூர்தர்ஷனில் இருந்த தேஜெஷ்வர் சிங், நடிகர் கபீர் பேடி ஆகியோரின் ராக்ஷஸ ஆகிருதிகள், மற்றும் என்னுடைய நண்பன் வீரேந்தர் சிங் பஞ்சாப் பற்றி சொல்லும் வீர வரலாறு எல்லாம் கூட ஒரு காரணம்.(அவனிடம் சர்தார் ஜோக்குகளை சொல்வதற்கு எனக்கு மனம் வந்ததே இல்லை). ஆனால் இதிலெல்லாம் பொருந்தாத குஷ்வந்த் சிங்-கின் அக்கப்போர்-களை அவ்வப்போது,குறிப்பாக இந்த ராஜ்கபூர் உரையாடல், அன்னை இந்திரா அவர்களைப் பற்றிய விமரிசனம் ஆகியவற்றை கேட்டே வளர்ந்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்து அவரை Illustrated Weekly-ன் ஆசிரியர் என்ற அளவே தெரியும்.அவர் எழுதிய புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை.என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு Blissful Sikh.

நேற்றைய Hindu-வில்,
Khushwant Singh Practished at Lahore High Court.
After 1947, he joined the foreign services and served as a diplomat for a few years in London, Paris and Ottawa. He would latter describe his years of law practicing and diplomacy as "wasted years of my Life". In 1951, Mr.Singh began his career as journalist with the All India Radio, and by 1969, joined as editor at Illustrated Weekly.

Oh Khuswant Ji, you are an enigma!

இரண்டு நாளைக்கு முன்பு, Headlines Today-ல் டிசம்பர்-2009 Recap, கோச் வித் கோயல், குஷ்வந்த் சிங் இண்டர்வியூ பார்த்துக் கொண்டிருந்த போது என் மனைவி சொன்ன வார்த்தை एक गंधा लडका.

உனக்கு பிடிக்காதது எல்லாம் எனக்கு பிடிக்குமே!


Khushwant Singh's Last Big Public interaction.

http://www.bharatnewschannels.com/headlinestoday-news-watchonline/on-the-couch-with-koel-kushwant-singhs-acid-wit-video_849c504ec.html

2003

அவரை உனக்கு நல்லாத் தெரியும்னு சொல்றியே சுந்தர்! வேணா கேட்டுப் பாக்கலாமா?

வீரராகவனுக்கு அவரை எப்படியாவது TRAINING PROGRAMME-ல் பேச வைத்துவிட வேண்டும்!
கேட்டுப் பாக்கலாம் சார்! அவர் ஒகே சொன்னவுடன் பால்கிஷன் ஸாருக்கு சொல்லிக்கலாம்.
உடனே கிரீம்ஸ் ரோடு அப்போல்லோ ஹாஸ்பிட்டல் சென்று அவர் செக்ரெட்ரியிடம் என் விசிட்டிங் கார்டை கொடுத்தவுடன், அவர் உள்ளே சென்று உடனே திரும்பியவர்,
ஸார், அடுத்த பேஷன்ட்டுடன் உங்களை உள்ளே வரச் சொல்கிறார்!

A MAN WITH MODESTY!

அடுத்து உள்ளே சென்றவுடன் 6 1/2' அடி உருவம், கம்பீரமாக DR.K.P. MISHRA. MD., DM (CARDIOLOGIST), நவீன காலத்து ECG-ன் தந்தை, உலக புகழ் பெற்ற இருதய நோய் நிபுணர்,எங்களுடன் உள்ளே வந்த பேஷன்ட்டை தன் அருகே அமர சொல்லிவிட்டு,

SIT DOWN GENTLEMEN! ஒரியா வாசனையுடன் ஆங்கிலம்.

வீரராகவன் சிறிது தயங்கும் போதே, I SAY YOU SIT DOWN!

A MAN OF CURT!

DR. MISHRA, பேஷன்ட்டிடம் திரும்பி, அவருக்கு செய்யப்பட்ட சர்ஜரி-ஐ ஒரு CD-ல் இருந்து போட்டுக் காட்டி, விளக்கியவாறே,மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

வீரராகவன், ஏன் சுந்தர், முடியுமா?

பார்க்கலாம் சார்!

பேஷன்ட் எழுந்து செல்ல, உங்கள் நெஞ்சை கையில் பிடித்தவாறே இருக்க வேண்டாம், நான் தான் சரி செய்துவிட்டேனே, என்று அவரிடம் சிரித்தவாறே ஆதுரமாய் சொல்லிவிட்டு, என்னுடைய கார்டை கையில் வைத்துக் கொண்டு,

YES MR. SUNDAR!

நான் உடனே டாக்டர், எங்கள் நிறுவனத்தின் ஒரு ட்ரைனிங் ப்ரோக்ராம்மில் நீங்கள் ஒரு LECTURE கொடுக்க வேண்டும்.

HOW MANY OF YOU?

நீங்கள் வர முடியுமா?

நான் தான்  நீங்கள் எத்தனை பேர் என்று கேட்டு விட்டேனே?

WHAT TOPIC?

நான் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்.
JOY OF WORKING, பற்றி பேசலாமா? அவரே முடித்து விட்டார்.

Thank You Doctor! இந்த தேதியில் முடியமா?

தனது மொபைல் போனின் எண்ணைக் கொடுத்து, ஒரு நாள் முன்னதாக நினைவு படுத்தினால் போதும் என்று சொல்ல,

எப்படி arrangements வேண்டும் Doctor?

இரண்டு மணி நேரம் முன்னதாக ஒரு TAXI அனுப்பினால் போதுமானது.Please note "Not a Company Car"!

ஓகே டாக்டர்!

பிறகு அவர் அன்று கொடுத்த உரையில் காலை வாக்கிங், யோகாவின் நிலைகள், சவால்களை எப்படி எடுத்துகொள்வது, உணவு எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளை சரியாக எழுதினால்  நான் ஒரு BEST SELLER!

பிறகு விடை பெறும்போது ஒரு எண்பது பேருக்கு தான் எழுதிய "JUST A MINUTE DOC" ஜோக் புத்தகத்தை ஆட்டோக்ராப் செய்து கொடுத்து விட்டு, சுந்தர்! ECR ரோட்டில் 'கானாத்தூர்-ல் என் உதவியுடன் கட்டபட்ட ஜெகநாத் கோயிலுக்கு( replica of PURI) அனைவரையும் கூட்டிச் சென்றுவிட்டு எனக்கு போன் பண்ணி சொல்ல வேண்டும்! என்று சொன்னவரை,
பிறகு கோட்டுபுரத்தில் இருக்கும் வரை அதிகாலையில்  நான் சென்னை திரும்பும் நேரத்தில்,அவர்  நடை பயிற்சி செய்யும் போது சந்தித்ததுண்டு.

Doctor! You left a rich Legacy to fellow Doctors and a common man like me!

I MISS YOU DOCTOR!

(DR. K.P. MISHRA PASSED AWAY ON 15TH MARCH 2014)

Tuesday 11 March 2014


தெகிடி


ஞாயிறு இரவு ஒரு "தெகிடி"யான ஆச்சரியம்!

தயாரிப்பாளர் செந்தில்குமார், டைரக்டர் P.ரமேஷ், சினிமாட்டோகிராபர் தினேஷ் கிருஷ்ணன், இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோரின் ஒரு-தில்-முயற்சி.

தமிழ் சினிமாவிற்கான ஒரு புதிய களம்-துப்பறிவதின் முறைகள், யுக்திகள்.

சாதாரணமாக எல்லாம் முடிந்தவுடன் வரும் போலீஸ், இதில் லீட் செய்கிறார்கள். ஒரு கிரைம் த்ரில்லரில், காதல், காமெடி, பாடல்கள் என்று துணிச்சலாக செய்து இருக்கிறார்கள்.
சீன்களுக்கு இடையில் உள்ள transition-ல்லாம் ஆங்கில படங்களுக்கு இணையான Lens Movements, Background scoring.

ஓரே ஒரு James Hadley Chase Novel படித்தவர்கள் கூட scene by scene சொல்ல முடியும். தற்செயல் விபத்துகள் போல ஜோடிக்கப்பட்ட சீரியல் கொலைகள், ஒரு specialized Detective ஹீரோ, அவருக்கு உதவும் போலீஸ் அதிகாரி Chase கதைகளில் வரும் Tom Lepski போல், குற்றவாளி தன்னை அறியாமல் தவறு செய்வார் என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையை சொல்வது, குற்றவாளிக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்ற James Hadley Chase-இன் கோட்பாடுகள், பூட்டியுள்ள கார் கதவை சாவி இல்லாமல் திறப்பது,போலீஸ் கஸ்டடியில் உள்ள இடத்தை அவர்களுக்குத் தெரியாமல் இருட்டில் டார்ச் லைட் உதவியுடன் அங்குல அங்குலமாக தடையதிற்காக தேடுவது, தேடிக்கொண்டு இருக்கும்போது வில்லன் வருவது போன்ற காட்சிகள் விறுவிறுப்பை கூட்டினாலும், கதையை இப்படித்தானே நகர்த்தவேண்டும் என்ற ஒரு கட்டாயம்.

சடகோபன் அசோக் செல்வனுக்கு துப்பறியும் வேலையை விலாவாரியாக விவரிப்பது, ரசிகர்களை தயார்படுத்துவதற்காக என்பதால், அதையே suspense உபகரணமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. ஒரு டிடெக்டிவ் எப்படி உயிர் நண்பனுடன் ஒரே வீட்டில், தன் வேலையை பற்றி பகிராமல் இருக்க முடியும். ஒரு Subject-டுடன் (யாரை பின் தொடர வேண்டுமோ) அவருடன் பிரத்தியோக தொடர்பு வைத்துக் கொள்ள கூடாதோ, அவரையே காதலிப்பது, இவை திரைக் கதை எப்படிப் போகும் என்று என்னைப் போன்ற சாதாரணன் கூட சொல்ல முடியும்.

சண்டைக் காட்சிகள் Steven Seagal சண்டையிடுவது போல், மிக அருகிலேயே இருந்துகொண்டு, சடகோபனின் ஆயுதத்தாலேயே, ஜெயப்ரகாஷ் அடிப்பது ஒரு உதாரணம், கமல் இதைப் போல் விஸ்வரூபத்தில் முதல் சண்டையை செய்திருப்பார்.நீங்கள் அந்த காட்சியை உணரும் முன்னால் முடியும் வேகம், சூப்பர்!
அதே சமயத்தில் வில்லன் சைலேஷ், ஹீரோவின் கழுத்தை பிடித்து தர தரவென்று இழுத்துப் போய், தலையை சுவரில் மோதும் போது அசோக் தன் கண்களை இமைக்காமல் இருப்பது பொருத்தமில்லாத ஒரு Close-up ஷாட்டினால்  அசோக்-காக சண்டை காட்சியை மெதுவாக படமாக்குவது
அப்பட்டமாக தெரிகிறது.

வைத்தியநாதன் அசோக்-ஐ எதையும் கேட்காமல் ஜாமீன் எடுக்கும் போதே வில்லன் யார் என்று யூஹிக்கமுடியும்.

அதே போல் "புருஷோத்தமன் வல்லபா"-வை விட்டு வைக்கும்போதே Second Part வரும் என்று தெரியும்.

மொத்த படத்தையும் Flash Back-லும், Detective Agency பற்றி கடைசியிலும்  சொல்லி இருந்தால் மொத்த TONE-மே மாறி இருந்திருக்கும்.

தெகிடி கண்டிப்பாக ஒரு Weekend Program.

Monday 3 March 2014


A Day of Gladiator
22.02.2007

காலை 10 மணிக்கு சேர்மன் பர்சனல் அசிஸ்டன்ட் புவனாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
சுந்தர் சார்!குட்மார்னிங், மதியம் 3 மணிக்கு சேர்மன் பத்ரி சாரிடம் discussion, Just to remind you!
ஓகே Mrs. புவனா!
என்ன ஜி! ஏன் டல்லாயிட்டீங்க? பரிவுடன் சகதர்மினி.
இல்லம்மா! கொஞ்ச நாளைக்கு இட்லி கிடைக்காது.
பாஸ்மதி ரைஸ்தான், சர்க்கரை போட்ட தயிர்தான்,
உருளை, காலிபிளவர்தான், வேற காய்கறியே பார்க்கமுடியாது.
டேப் ரெகார்டர் வச்ச டீ கடை பார்க்கமுடியாது. ஒரு tripod, kettle.2 கண்ணாடி டம்ளர் கடைதான்.கார், டாக்ஸியெல்லாம் கிடையாது, செக்யூரிட்டி ப்ரொப்ளம்.எங்கயாவது போய்ட்டு அண்ணாந்து பார்த்தால் "இங்கு துப்பாக்கி கிடைக்கும்" என்ற போர்டு இருக்கும்.ஜான வாசத்து கூட்டம்கூட சுற்றிவர கயிறுகட்டி குதிரையில் ரைபிள் உடன் கூடிய காவலர்களுடன்தான் நடக்கும்.பசங்களோட Body language-ல்லாம் நமக்கு ஒத்துக்கவே முடியாது.நம்ம டீலர் நம்ம ஸ்டாக் மேலேயே உங்காத்துகிட்டு ஸ்டாக் வர்லேம்பான்! என்னோட ஹிந்தியும் உதவாது!
சரியாக 2.30 ஆபிசில் செக்யூரிட்டி எழுமலை உதவியுடன் புல்லெட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி Mezzanine floor ஏறியவுடன், ஸார் Chairman வந்துட்டார், நீங்கள் வந்தவுடனே உள்ளே வரச் சொன்னார்!
Good-afternoon Sir!
வா சுந்தர்! கேசவ் பீகார் டிரான்ஸ்பர்-க்கு ஒத்துகிட்டான்!
உனக்கு 4 மாதம் பாட்னா டெபுடேஷன், அவனுக்கு உதவ,
Double Salary, Double allowance, Raj paradise-ல் Stay.
Your Time starts now!
ஒகே சார்! Done.
ஸார் அதுக்குள்ள discussion முடிஞ்சிருச்சா?
அவ்வளவுதான்!


(ச்சும்மா! பாட்னா பேருந்து நிலையமும், ரயில் நிலையமும், CULTURAL SHOCK உத்தரவாதம்)