Tuesday, 11 March 2014


தெகிடி


ஞாயிறு இரவு ஒரு "தெகிடி"யான ஆச்சரியம்!

தயாரிப்பாளர் செந்தில்குமார், டைரக்டர் P.ரமேஷ், சினிமாட்டோகிராபர் தினேஷ் கிருஷ்ணன், இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோரின் ஒரு-தில்-முயற்சி.

தமிழ் சினிமாவிற்கான ஒரு புதிய களம்-துப்பறிவதின் முறைகள், யுக்திகள்.

சாதாரணமாக எல்லாம் முடிந்தவுடன் வரும் போலீஸ், இதில் லீட் செய்கிறார்கள். ஒரு கிரைம் த்ரில்லரில், காதல், காமெடி, பாடல்கள் என்று துணிச்சலாக செய்து இருக்கிறார்கள்.
சீன்களுக்கு இடையில் உள்ள transition-ல்லாம் ஆங்கில படங்களுக்கு இணையான Lens Movements, Background scoring.

ஓரே ஒரு James Hadley Chase Novel படித்தவர்கள் கூட scene by scene சொல்ல முடியும். தற்செயல் விபத்துகள் போல ஜோடிக்கப்பட்ட சீரியல் கொலைகள், ஒரு specialized Detective ஹீரோ, அவருக்கு உதவும் போலீஸ் அதிகாரி Chase கதைகளில் வரும் Tom Lepski போல், குற்றவாளி தன்னை அறியாமல் தவறு செய்வார் என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையை சொல்வது, குற்றவாளிக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்ற James Hadley Chase-இன் கோட்பாடுகள், பூட்டியுள்ள கார் கதவை சாவி இல்லாமல் திறப்பது,போலீஸ் கஸ்டடியில் உள்ள இடத்தை அவர்களுக்குத் தெரியாமல் இருட்டில் டார்ச் லைட் உதவியுடன் அங்குல அங்குலமாக தடையதிற்காக தேடுவது, தேடிக்கொண்டு இருக்கும்போது வில்லன் வருவது போன்ற காட்சிகள் விறுவிறுப்பை கூட்டினாலும், கதையை இப்படித்தானே நகர்த்தவேண்டும் என்ற ஒரு கட்டாயம்.

சடகோபன் அசோக் செல்வனுக்கு துப்பறியும் வேலையை விலாவாரியாக விவரிப்பது, ரசிகர்களை தயார்படுத்துவதற்காக என்பதால், அதையே suspense உபகரணமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. ஒரு டிடெக்டிவ் எப்படி உயிர் நண்பனுடன் ஒரே வீட்டில், தன் வேலையை பற்றி பகிராமல் இருக்க முடியும். ஒரு Subject-டுடன் (யாரை பின் தொடர வேண்டுமோ) அவருடன் பிரத்தியோக தொடர்பு வைத்துக் கொள்ள கூடாதோ, அவரையே காதலிப்பது, இவை திரைக் கதை எப்படிப் போகும் என்று என்னைப் போன்ற சாதாரணன் கூட சொல்ல முடியும்.

சண்டைக் காட்சிகள் Steven Seagal சண்டையிடுவது போல், மிக அருகிலேயே இருந்துகொண்டு, சடகோபனின் ஆயுதத்தாலேயே, ஜெயப்ரகாஷ் அடிப்பது ஒரு உதாரணம், கமல் இதைப் போல் விஸ்வரூபத்தில் முதல் சண்டையை செய்திருப்பார்.நீங்கள் அந்த காட்சியை உணரும் முன்னால் முடியும் வேகம், சூப்பர்!
அதே சமயத்தில் வில்லன் சைலேஷ், ஹீரோவின் கழுத்தை பிடித்து தர தரவென்று இழுத்துப் போய், தலையை சுவரில் மோதும் போது அசோக் தன் கண்களை இமைக்காமல் இருப்பது பொருத்தமில்லாத ஒரு Close-up ஷாட்டினால்  அசோக்-காக சண்டை காட்சியை மெதுவாக படமாக்குவது
அப்பட்டமாக தெரிகிறது.

வைத்தியநாதன் அசோக்-ஐ எதையும் கேட்காமல் ஜாமீன் எடுக்கும் போதே வில்லன் யார் என்று யூஹிக்கமுடியும்.

அதே போல் "புருஷோத்தமன் வல்லபா"-வை விட்டு வைக்கும்போதே Second Part வரும் என்று தெரியும்.

மொத்த படத்தையும் Flash Back-லும், Detective Agency பற்றி கடைசியிலும்  சொல்லி இருந்தால் மொத்த TONE-மே மாறி இருந்திருக்கும்.

தெகிடி கண்டிப்பாக ஒரு Weekend Program.

No comments:

Post a Comment