Wednesday 4 December 2013

17.09.2013

15th December 2007 விடியற்காலை சுமார்  நான்கு மணிக்கு ஒரு சுஹிர்தமான சொப்பனம் கண்டு விழித்துக் கொண்டேன். அந்த கனவை மறக்காமல் இருப்பதற்காக என் துணைவியிடம் சொல்லி வைத்து விடலாம் என்ற யோசனையோடு அவளை துயில் எழுப்பினேன். அவள் அதெற்கெல்லாம் சற்றும் அயராமல் Ceaser சும்மாதான் குரைத்துக் கொண்டிருக்கிறான்!

நீங்கள் கவலைப்படாமல் தூங்குங்கள் என்று அவள் தன் தூக்கத்தை தொடர, அம்மா! நான் ஒரு கனவு கண்டேன்! என்று சொல்லி நான் ஒரு கோயிலில் நுழைவதையும்,கோயிலின் சுத்தத்தையும், அதன் விசாலத்தையும்  அங்கிருக்கும் வேதியர்களும் அப்போதுதான் ஹோமத்தை முடித்துக் கொண்டே, சுந்தர்! ஏன் இவ்வளவு தாமதம்? சீக்கிரம் சேவித்துக் கொள்! நடை சார்த்தவேண்டும் என்று துரிதப்படுத்தினார்கள் என்றும்  சொன்னவுடன், என் துணைவி சுதாரித்துக் கொண்டு ஓ! அவர்களுக்கும் உங்கள் நேரந்தவறாமை தெரிந்து விட்டதா? என்று அந்த நேரத்திலும் வாரினாள்!

 பிறகு அவளே தொடர்ந்தாள், ஒரு வேளை உங்கள் பிறந்தநாள் இன்று என்று ஸ்ரீ ரங்கநாதர் சந்நிதியில் நேமம் வீரராகவனும், விழுப்பனூர் மணிகண்டனும் காத்துக் கொண்டிருப்பார்கள் போல! என்று நான் சொன்ன கனவை அவளும் ஆமோதித்தாள்.

பிறகு என்ன? மறுபடியும்  கும்பகர்ண மார்க்கம்தான்!

காலை பத்துமணிக்கு அவசர அவசரமாக கார்-ஐ எடுத்துக்கொண்டு கோயம்புத்தூரில் வழி கேட்டு, வேம்கடபுரத்தில் ஒரு பெருமாள் கோயில் இருப்பதாக தெரிந்து கொண்டு போய் இறங்கினால் நான் கனவில் கண்ட அதே ஸ்ரீ: ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ காரண கரிவரதராஜ பெருமாள் திருகோயில். நான் இறங்கி நடந்தபடியே என் மனைவியிடம் நான் இந்த கோயில்-ஐ அடிக்கடி கடந்து போய் இருக்கிறேன், ஆனால் சேவிப்பதற்கு வாய்க்கவில்லை! என்று சொன்னேன், மேலும் ஏன் மற்ற மகான்களுக்கு அறிவுறுத்தியபடி, என்னை கோயில் எல்லாம் கட்டச் சொல்லாமல் சேவிக்க மட்டும் வரச்சொன்னார் என்று அவளுடன் பேசியபடி சேவித்து, அவல் பிரசாதம் வாங்க வந்தபோது, Trustee இளையாழ்வாரும், வேல்நம்பியும் என்னை அழைத்து, நீங்கள் பணிகொள்வார் குழாமில் சேர்ந்து ஸ்வாமிக்கு கைங்கர்யம் செய்யுங்கள் என்று பணித்தனர்.

ஆஹா!காரணராஜர் எனக்கு கட்டளை இட்டுவிட்டார்! நீ ஸ்ரீரங்க த்தில் பிறந்து வளர்ந்தாலும் உனக்கு வைகுண்ட ஏகாதேசி வைபவ ப்ராப்தி மட்டும்தான் அங்கு, மற்றவையெல்லம் இங்குதான் என்று.என்னுடைய சொப்பனதிற்கான காரணத்தை சொல்லிவிட்டார் காரணராஜர்!

நானும் அடியேன் தண்டம்! என்றும் சமர்ப்பித்து

நான்கிநாலே கைங்கர்யம்
தேகத்தாலே பிரதானம், இத்தே
எளிமையும், இன்னார் இணையார் வாசியற்று
முப்பலங்களையும் அளிக்குமிறே.

நேற்று எம்பெருமானை பெரிய திருவோண புறப்பாட்டு மஹொத்சவத்தில் ஸேவித்து உய்யுண்டோம்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று
காரேய் கருணை, காரண கரிவரதா
நின் செவ்வடி செவ்வி திருக்காப்பு.

No comments:

Post a Comment