Wednesday 4 December 2013

24.08.2013

74 வயது இளமையான எனது தந்தையின் சமீபத்திய கவிதை

Sachin Tendulkar,Roger  Federer-யை பார்த்து
கற்றுக்கொண்ட பேட்டிங் நுணுக்கம் எல்லாம்
ஸ்ரீரங்கம், புஷ்பக் நகர் கொசுக்களிடம்
செல்லுபடியாவதில்லை!

மாலை 4 மணிக்கே, கோட்டைக் கதவு, புறவாசல்
பலகணி, சாரளம், அனைத்தையும் மூடியபின்பும்
போர்பரணி பாடி பறக்கின்றன கொசுக்கள்.
எங்கே உள்ளது என்று தெரியவில்லை
அவற்றிற்கான திட்டிவாசல்!

உடலில் கடிபட்ட இடத்தை மின்னலென நாடி
களிநடனம் புரியும் விரல்களுக்கு
முன்னமே இத்திறமை வாய்த்திருந்தால்
ஒரு வீணைக் கலைஞர் என்றோ, கிடாரிஸ்ட்
என்றோ பேராவது கிடைத்திருக்கும்!

ஆனால் இப்போது விருப்பமின்றியே இரத்த தானம்
செய்யும் பேறல்லவா கிடைத்திருக்கிறது!

கார்த்திகேயன் இரத்தினஸ்வாமி

No comments:

Post a Comment